வெள்ளி, 28 ஜூன், 2013

சுகவீரபாண்டியனின்... அம்மண அரசியல்..


பகுத்தறிவுப் புலி சுபவீ அவர்களின் சமீபகால உளறல்கள் யாவும் அவரது மூளை பீறிட்டு காது மூக்கு, தொண்டை வழியாக வழிவதையே காட்டுகிறது. அதுவும் கருணாநிதியைக் காப்பாற்ற அவர் போடும் சாதி ஒழிப்பு போராளி வேடம் இருக்கிறதே சொல்லவே வேண்டாம்...

முத்து முத்தாக அவர் உதிர்த்த முத்துக்கள் தான் இவை..

“என் சாதிக்காரனே பருத்தி விதைச்சு
என் சாதிக்காரனே நெய்து
என் சாதிக்காரனே தைத்து..
என் சாதிக்காரனே விற்கும்
உடைகளைத்தான் போடுவேன்
என்று முடிவெடுத்தால்..
ஆயுள் முழுவதும்
அம்மணமாய்த்தான்  திரிய வேண்டும்”.

கேட்பதற்கு நல்லா ரைமிங்கா இருந்தாலும்... முதலில் இதுபோன்ற வாதங்கள் அறிவாளிகளால் முன்வைக்கப்படுவதே இல்லை..

இது முட்டாள்கள் எழுப்பும் வாதம்..

ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கோ, இனத்திற்கோ, இனக்குழுவிற்கோ, சமயத்திற்கோ உரிமை கேட்கும்போது, நியாயம் கேட்கும்போது, இதுபோன்ற பத்தாம்பசலித்தனமான கேள்விகளை எதிரிகள் எழுப்புவார்கள்.

தமிழ்வழிக் கல்வி வேண்டி போராடிய போது தமிழை வைத்து குண்டுசட்டியில்தான் குதிரை ஓட்ட வேண்டும் என்று அறிவில்லாமல் பேசியவர்கள் மனநிலையை மிஞ்சி விட்டார் இவர்.

இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லைதான்.  ஆனாலும் அறிவுஜீவிகள் என்ற போர்வையில் சில அறிவுகெட்டவர்கள் வாதாடுவதும் அதற்கு நடுநிலையாளர்கள் என்ற போர்வையில் சில சாதி வெறியர்கள் கைதட்டி சபாஷ் போட்டு விசிலடிப்பதும் சமீபகாலமாக தமிழ்நாட்டில் பரவி வரும் வி­க்கலாச்சாரமாகி வருகிறது. எனவே இது போன்ற சில்லறைத்தனமான கேள்விகளுக்கு கூட பதில் சொல்லித் தொலைய வேண்டிய இக்கட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறோம்.

சாதியை ஒழிப்பதற்கு திராவிடப் போராளிகள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் கலப்புத் திருமணம். கலப்புத் திருமணங்களால் சாதி ஒழியுமா? ஒழிந்திருக்கிறதா என்பது வேறு வி­யம். அந்த திருமணங்களை சாதி ஆதரவாளர்கள் எதிர்ப்பதால், அதற்காக சுபவீ போன்றவர்கள் எழுப்பும் வினாக் குறிதான் என் சாதிக்காரனே பருத்தி விதைச்சு... போன்ற அம்மணமாய்த் திரியும் வாதங்கள்.

இவர் ஓயாமல் ஒத்து ஊதும் திராவிடர் என்னும் இனத்திற்கும், இவர் பேசும் அரைகுறைத் தமிழ்த் தேசியத்திற்கும் கூட இவர் கேட்கும் கேள்வி பொருந்தும் தானே?

அப்படியானால் திராவிடர்கள் தவிர மற்றவர்கள் பொருட்களை மறுத்து விட்டு வாழ்க்கை நடத்த முடியுமா இவர் கூறும் அந்த திராவிடர்களால்? அல்லது திராவிட இயக்க தமிழர்களால்...? “திராவிடனே விதை விதைச்சு...” என்று மற்றவன் கேட்கத் தொடங்கினால் இந்த பகுத்தறிவாளி எங்கே போய் தன் முகத்தை வைத்துக்கொள்வார்?

தீவிர சாதி ஒழிப்பு போராளியான சுபவீ அவர்களின் அம்மா என்ன சாதி? அப்பா என்ன சாதி? மனைவி பிள்ளைகள் என்ன சாதி? அவர் அண்ணன் இயக்குநர் முத்துராமன் என்ன சாதி? அவர் மனைவி என்ன சாதி? அவர் பிள்ளைகள் என்ன சாதி?

எல்லோரும் நாட்டுக்கோட்டை செட்டியார் சாதிதான்...

அப்படி என்றால் “நான் சாதி ஒழிப்பு போராளி என் வீட்டிற்கு இனி செட்டியார் சாதிக்காரர்கள் யாரும் வரவோ போகவோ கூடாது” என சுவீயால் அறிவிக்க முடியுமா?

இது என்ன அபத்தமான கேள்வியாக இருக்கிறது என்கிறீர்களா? அப்படித்தான்.. இவர் அண்ணன் தம்பிகள் மாமன் மச்சான்கள் எப்படி இவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சொந்த சாதிக்காரர்களாக இருக்கிறார்களோ அதேபோலதான் பாதிக்கப்படும் எங்கள் சாதிக்காரர்கள் எங்கள் அண்ணன் தம்பிகளாக இருக்கிறார்கள்.. அவர்களுக்கு நியாயம் கேட்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

எல்லாம் இருக்கட்டும்..

ஒரு வாதத்திற்காக இவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்கிறோம்...
வன்னியர்கள் பருத்தி விதைக்கிறார்கள்..
வன்னியர்கள் நூற்பு ஆலைகளில் வேலை பார்க்கிறார்கள்..
வன்னியர்கள் நெசவு செய்கிறார்கள்..
வன்னியர்கள் துணி தைக்கிறார்கள்..

எனவே எங்களுக்கு கவலை இல்லை.. எங்கள் சாதிக்காரன் நெய்த துணிகளைத்தான் வாங்குவோம் என்று நாங்கள் முடிவெடுத்தால் அம்மணமாகத் திரிய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை செட்டியாரே...

சேற்றில் கால் வைத்தறியாத...

உடல் உழைப்பு என்றால் என்னவென்றே தெரியாத.. உங்கள் செட்டியார் சாதிக்காரர்களிடமும் மற்றும் உங்களைப் போன்று அடுத்தவன் உழைப்பை உறிஞ்சி பெருத்துக் கிடக்கும் பிற சாதிக்காரர் களிடமும் போய் உங்கள் சாதி ஒழிப்புப் பிரச்சாரத்தை நடத்துங்கள்..

ஊருக்கு இளைச்சவன் வன்னியன் என்று எங்களிடம் வந்து உங்கள் சாதி ஒழிப்புச் சரக்கை விற்க முயலாதீர்கள்..
-------------------------------------------------------------------

சாத்தான் வேதம் ஓதுகிறது.


சுபவீ என அன்போடு அழைக்கப்படும் வீரபாண்டிய கட்டபொம்மன் செட்டியார், தன்னை ஜெயலலிதா சிறைக்கு அனுப்பிய காழ்ப்பிலும், வெளியே எடுக்க கருணாநிதி உதவிய செஞ்சோற்றுக் கடனுக்காகவும், கருணாநிதிக்கு ஜால்ரா போட ஆரம்பித்தார்.
அப்போதைய ஜால்ரா சத்தம் எதுவரை போனது என்றால், தலைவர் பிரபாகரனின் அன்னை பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது, அவரை சிகிச்சை பெற விடாமல் இந்திய அரசும், கருணாநிதியும் திருப்பி அனுப்பினார்கள்.
அப்போது, புலம் பெயர் தமிழர்கள் சிலர் இவரிடம் தொலைபேசியில் கருணாநிதியின் மூலம் பார்வதி அம்மாவுக்கு உதவி செய்யுங்கள் எனக் கேட்டபோது, “இப்போதுதான் என்னை கண் தெரிகிறதா” எனக் காட்டமாகக் கேட்டாராம்.
இதே புலம்பெயர் தமிழர்கள், உன்னை ஈழ ஆதரவாளன் என்று நம்பி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் அழைக்கவில்லையா? அவர்கள் வீட்டுச் சோற்றை நீ தின்றதில்லையா? அப்போது இனித்ததா? இப்போது மட்டும் கசக்கிறதா சுபவீ?
தனிப்பட்ட பிரச்சனைகளையும் இன நலனுக்கான பிரச்சனைகளையும் பிரித்தறிந்து பார்க்கத் தெரியாத சுயநலமி சுபவீ. இனநலன் குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் ஒயாமல் ஓதிக்கொண்டிருக்கிறது. 

வேட்டியோடு என்ன விரோதம்?


நந்தன் வழி இதழில் இவர் ஆசிரியராக இருந்த போது. தான் ஏன் வேட்டி கட்டுவதில்லை? ஏன் மீசை வைத்துக் கொள்கிறேன்? என்பதற்கு விளக்கம் கொடுத்தார்.
அதாவது, வேட்டி கட்டிக் கொள்வதும், மீசை மழித்து இருப்பதும், இவர் சாதியான நாட்டுக்கோட்டை செட்டியாருக்கான அடையாளங்களாம். அதனால் சாதி ஒழிப்பு போராளியான இவர் அடங்க மறுத்து. மீசை வைத்துக் கொண்டும். பேண்ட் போட்டுக்கொண்டும் இவர் சாதி ஒழிப்பை காட்டுவாராம்.
சுபவீயின் சாதி ஒழிப்பு வீரம் மீசை மயிரோடு நின்று விட்டது. ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு தன் பெண்ணை கொடுத்தோ, பெண் எடுத்தோ காட்ட முடியாத சாதி ஒழிப்பு போராளி சுபவீ.. அடுத்தவன் வீட்டுப் பெண்களை மட்டும் கொடுக்கச்சொல்லும் புரோக்கர் வேலைகளை இனி விட்டுவிட வேண்டும்.

-மாரிமுத்து ஜவகர்

1 கருத்து: